(PJ) நம்மை எங்கு அழைத்துச் செல்கிறார்!

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு மஷூராவில் பிஜே அவர்களின் உண்மை முகத்தை புரிந்துகொண்ட TNTJ முக்கிய பிரமுகர் அன்ஸாரி!
இனியாவது P.J (TNTJ)வை நேசிப்பவர்கள் !!!
உண்மை இஸ்லாத்தை நேசிப்பார்களா??
?
TNTJ வருகின்ற ஜனவரி 31ல் ஷிர்க் ஓழிப்பு மாநாடு நடத்துகிறது இந்த மாநாட்டிற்கு பின் இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படப்போகின்றது என அவர்களில் பலர் பெருமையாக பேசுவதும் எழுதுவதுமாக உள்ளனர்
அந்த மாற்றம் என்ன தெரியுமா?
அறிவுக்கு பொருந்தாத அல்குர்ஆனின் சில ஆயாத்துகளை நிறாகரிக்கப்போக
ிறார் அண்ணன் P Jainulabideen- P.J
தம்பிகள் என்ன செய்யப் போகிறீகள்? ஸஹீஹான
ஹதீஸ் நிராகரிப்பிற்கு பிறகு! குர்ஆன் ஆயத் நிராகரிப்பையும் ஏற்றுக் கொள்ள போகிறீர்களா?
சகோதரர்களே! இனியாவது இவரை புரிந்து கொள்ளுங்கள் !
மஷூராவில் பிஜே பேசியது...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக சேவை செய்து வரும் சகோதரர் அன்ஸாரி எனும் தோழர் வழக்கமாக Tntj வுடன் கூடி சமூக நலனுக்காக அதிகம் பாடுபடுபவர்.

இவர், நேற்று கூறிய செய்தி நம்மை திடுக்கத்திற்கும் பீதிக்கும் உள்ளாக்கியது.

அது என்ன என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்….

ஆரம்ப காலத்தில் (1990ல்) இந்த தவ்ஹீது பிரச்சாரத்தை தொடங்கியபோது பிரச்சினைகளை விட கேள்விள்தான் அதிகம் எனலாம்.

உதாரணமாக தர்ஹா வழிபாட்டிற்கு முதன் முதலாக நாம் சொன்ன தடைதான் மக்களிடம் பகுத்தறிவை தூண்டியது.

சிந்தனை என்றால் என்ன என்று கூட அறியாமல் இருந்த முஸ்லிம்கள் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்கு அந்த சிந்திக்கும் திறனை நாம் உருவாக்கினோம்.

அறியாமையில் கிடந்த மக்கள் விழித்தெழுந்தார்கள். குரான் ஹதீஸ் இவைகளின் முக்கியத்துவத்தை முன்வைத்து, மதஹபுகளின் குழப்பங்களை தெளிவாக சுட்டிக்காட்டினோம்.

மேலும் பொது சேவைகளில் இறங்கி குடிநீர் பிரச்னை முதல் இடஒதுக்கீடு பிரச்னை வரை போராட்டம் நடத்தினோம்.

இந்த காலக்கட்டங்களில் நாங்கள் போராடுவதற்கும், தவ்ஹீது பணிகளை செய்வதற்கும், எதிர்ப்புகளுக்கு பதில் சொல்லுவதற்கும் எந்த பொழுதிலும் சளைக்கவேயில்லை.

இந்த இயக்கத்தின் தலைவரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அயராத முயற்சிகளும் நேரிலேயே பார்க்கும் வாய்ப்பு இருந்ததால், நாமெல்லாம் என்ன செய்கிறோம் இந்த சமுதாயத்திற்காக என்று என்னை பலமுறை சிந்திக்க வைத்தது உண்மை.

பிஜேவே நம்மை வழி நடத்த போதுமானவர் என்ற நம்பிக்கையும், நம் செயல்கள் சத்தியத்தை நோக்கித்தான் இருக்கிறது நிச்சயமான வெற்றி நமக்குத்தான் என்ற உறுதிப்பாடும் என்னிடத்தில் இருந்து கொண்டிருந்தது.
இதுவெல்லாம் சென்ற வாரம் வரை…
ஆனால் இன்று?

பிஜேவும், மற்ற முக்கியஸ்தர்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய ஒரு பேச்சு என்னுடைய நம்பிக்கையை துண்டு துண்டாக உடைத்து விட்டது.
யோசித்து…யோசித்து தலையெல்லாம் வலி.

இதனை யாரிடமாவது சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும் அளவுக்கு வலி.

இவரின் இந்த பெச்சினால் நெஞ்சில் வலி! அல்லாஹ்வையும் தூதரையும் நம்பி இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட எவராலும் இதை தாங்கிக்கொள்ள முடியாது.

அதனால் தான் அல்லாஹ்வுக்காக அவனது இந்த மார்க்கத்தை இந்த நம்பிக்கையை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தார்களே அந்த நன்றிக்காக இதை மக்களுக்கு தயவுசெய்து தெரியப்படுத்த நினைக்கின்றேன்.

அவர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா சகோதரர்களே?
ஷிர்க்குக்கு நாம் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், அவர்களின் அடிப்படைகளை தகர்க்க முடியவில்லை.

காரணம் ஒரு தனி மனிதன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை.
நாம் ஆய்வு செய்ததில் ஸஹாபக்களிலேயே பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது.

எனவெ ஸஹாபாக்களின் சொல்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

ஆக தனி மனித கருத்துக்கே மார்க்கத்தில் இடமில்லை என்கிற போது தனி மனித வழிப்பாடு என்பது இஸ்லாத்தில் இல்லை என முழங்கினோம்!
அவங்க ஷிர்க்கை விட்டாங்களோ இல்லையோ நமக்கு அறிவு வளர்ந்தது.

இந்த நேரத்தில் தான், நமக்கு குரானுக்கு முரன்படும் ஸஹீஹான ஹதீஸுகள் உள்ளது என தெரிய வந்தது.
எனவே அப்படிப்பட்ட ஹதீஸுகளையும், இக்காலகட்டத்தில் வாழும் நமது பகுத்தறிவுக்கு மாறாக உள்ள ஹதீஸுகளையும் வீசிவிடுவதாக நாம் முடிவு செய்தோம்.

யோசியுங்கள் அல்லாஹ் சொல்லவில்லையா? உங்கள் அறிவை கொண்டு குர்ஆனை ஆராய்ந்து பார்க்கமாட்டீர்களா? என கேட்கிறானே? என்றுகூறி யோசிக்கவைத்தோம்!

இன்று சில குரான் வசனங்களையும் பார்க்கிறோம் அதிலே தவ்ஹீதுக்கும் பகுத்தறிவுக்கும் மாற்றமான, விஷயங்கள் இருக்கிறது எனவும் தெரியவருகிறது.

உதாரணமாக உயிரற்ற சடலத்தை எழுப்பும் சம்பந்தமாக வரக்கூடிய சில குர்ஆன் ஆயத்களை சொல்கிறேன்
இதை நமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?
பறவைகளை மனிதன் எழுப்ப முடியுமா?

அல்லது மாட்டின் உறுப்பால் அடித்தால் இறந்த மனிதன் எழும்புவானா?
இறந்த மனிதனை எழுப்ப ஒரு மனிதனால் முடியுமா?
இவையெல்லாம் தவ்ஹீதுக்கு மாற்றமில்லையா?

இதுபோல் குர்ஆனில் இருக்கிறது
ஆகவே தான் சொல்கிறேன் குர்ஆனை பகுத்தரிவு கொண்டு நாம் மீண்டும் ஆராயவேண்டும்.

குர்ஆனின் வரலாறை பாருங்கள்.
ஒரு சில ஆயத்கள் ஓரே ஒரு ஸஹாபிக்கு மட்டும் தான் தெரியும்!

அது அந்த ஸஹாபிகளின் வார்த்தைகளாகவும் இருக்கலாமல்லவா?

அல்லாஹ் இந்த குரானை பகுத்தறிவால் ஆராய சொன்னதையும், அப்படி ஆராய்ந்தால் குழப்பமாக உள்ள முரன்பட்ட ஆயத்களையும் கவனித்துப் பாருங்கள்!

இதைப் பற்றி பிறமதத்தார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?
எனவே இப்படிபட்ட ஆயத்துகளை ஆய்வு செய்து அது பகுத்தறிவாலும் அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டு, ஹதீஸை போல் அறிவிப்பாளர் தொடரோடும் இருக்க வேண்டும்.

அப்படி முடியாது போனால் அது ஒரு ஸஹாபியின் சொல்லாகவோ அல்லது பின்னால் வந்தவர்களின் கொள்கைக்கு ஏற்ற இடைச் செறுகுதலாகவோ இருக்க வாய்ப்பிருக்கின்றது. எனவே நாம் குர்ஆனையும்இனி ஆராயவேண்டும்.

இது தான் எனது இறுதிமுடிவு
இப்படி பேசிக்கொண்டே போன அவர் பேச்சை தொடர்ந்து என்னால் கேட்க முடியவில்லை.

ஈமான் என்னை தடுத்தது.
இன்று நான் யோசிக்கின்றேன்…

இத்தனை காலமும் இந்த கொள்கைக்குத்தான் விதைகள் விதைக்கப்படனவா?
தர்ஹா வழிப்பாடு என்று ஆரம்பித்து அவ்லியா என்று ஒர் ஆளை காட்டுங்கள் என்று சவால் விட்டு?

மதுஹபுகாரன் சொல்லும் ஹதீஸ்களை எடுக்க முடியாது என்றெல்லாம் சொல்லிவிட்டு ?
அதே கிரந்த்ததில் வேறு ஒன்றுக்கு ஆதாரம் காட்டி பின் அதிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இட்டுகட்டு ஹதீஸ்கள் இருக்கின்றன எனக்கூறி?

ஹதீஸை சொன்ன ஸஹாபாக்கள் தொடரில் வருபவர்கள் யாரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை என்று சொல்லி?
ஸஹாபாக்களே அப்படியென்றால் அதற்கு பின்னர் வந்த கிதாபுகளை எழுதியவர்களை எப்படி நம்புவது என கூறி பிரச்சாரம் நடந்துகொண்டு இருப்பதை கவணிக்கும்போது!!
எனக்கு பொறி தட்டுகிறது.

இவர்எங்கே போகிறார்?
குர்ஆன் ஆயத்தையும் நிராகரித்து
தனி மனித வழிப்பாடு?
மீண்டும் எனக்கு பொறி தட்டுகிறது.

ஓ மார்கம் என்றால்..இவரை மட்டுமே நம்பச்சொல்கிறார்?!!!
அப்படியானால் படிப்படியாக தன்னை நோக்கித்தான் மக்களை அழைக்கிறாரா?

ஓ ... தன்னை மட்டும் நோக்கித்தான் மக்களை அழைக்கிறாரா?
இஸ்லாத்தை நோக்கி இல்லையா?
அல்லாஹ்வை நோக்கி இல்லையா?
ரஸூலை நோக்கி இல்லையா?
மனது கணக்கிறது
அல்லாஹ்வை நேசிக்கும் எந்த ஈமானிய உள்ளமும் இதை நிச்சயமாக ஏற்க்காது!!

பயமாக இருக்கிறது சகோதரர்களே!
இவர் பின்னாலிருந்து இஸ்லாத்தை உடைக்கும் அந்த சக்திகள் யார்?
இவரை ஏதாவது செய்து மரணிக்க செய்து விட்டால், இந்த கொள்கைக்காக இவர் சொன்னதை மட்டுமே நம்பியவர்களின் கதி என்ன?
அவர்களின் மறுமை நிலை என்ன?
குர்ஆனுக்கே அறிவிப்பாளர் தொடர் கேட்கும் இவர் யார்?
அல்லாஹ்வே ரப்பே காப்பாத்து…
நான் வெளியேரவா? இல்லை இவர்களோடு தான் இருக்க வேண்டும்மா …

இருந்து மக்களை, இந்த சமுதாயத்தை காப்பாற்ற பாடுபடவேண்டுமா?
இவர்களோடு இருந்தால் எனது மறுமையின் நிலை?
அல்லாஹ்வே வேதத்தை காப்பவனே!
உண்ணிடமே ஒப்படைக்கிறேன்.

கடைசியாக இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொள்கையில் உள்ள எனது சகோதரர்களுக்கு ஒன்று சொல்கிறேன்…

மத்ஹபுகளை வீசியெறிந்த நாம்?
இமாம்களை வீசியெறிந்த நாம்?
ஹதீஸ் ராவிகளை வீசியெறிந்த நாம்?
அதன் ஸனதை வீசியெறிந்த நாம்?
ஸஹாபாக்கள் சொல்லையும்! விளக்கத்தையும் வீசியெறிந்த நாம்? ஏன் ஸஹாபாக்களையே வீசியெறிந்த நாம்?
அவ்வளவு ஏன் ரஸூலையே சாதாரன மனிதர் என்று உறுதி கொண்டுள்ள நாம்?
வஹீ என்று யார் சொல்வதை நம்புவது?
குர்ஆன் என்று யார் சொல்வதை நம்புவது? யாரை கேட்பது? குரான் ஆயத்துக்கு யாரிடம் கேரண்டி கேட்பது?
ஒன்றும் செய்ய முடியாது சகோதரா,!!!
இவர் எங்கோ நம்மை அழைத்துச் செல்கிறார்!
பயமாக இருக்கிறது
நான் ஒன்று செய்தேன்! தனிமையில் உட்கார்ந்தேன்.

என்னையே ஆய்வு செய்து பார்த்தேன்!
யாரையும் அவ நம்பிக்கை கொண்டிருந்ததால் ஏசியிருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிவிட்டு எந்த இயக்கத்தையும் சாடாமல் சாராமல் நடு நிலையாக சிந்தித்தேன்.

தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை
அல்லாஹ் தெளிவு படுத்துவான்
நீயும் செய்து பார்!
அல்லாஹ்வை அஞ்சி நேர்மையாக நடந்தால் உனக்கு அவனே கற்றுத்தருவான் (2:282).


0 comments

Post a Comment