அறிமுகம்! ரேட் கட்டர் மவ்லீது!


 

அறிமுகம்! ரேட் கட்டர் மவ்லீது!

                                                       கோவை பகுதிகளில் இந்த வருடம் முதல் சூனா ஜமாஅத்துக்காரர்களால் புதிதாக ரேட் கட்டர் மவ்லீது என்ற புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அது என்னப்பா ரேட் கட்டர் மவ்லீது என்று விசாரித்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

                                                     அதாவது அடுத்த வருடத்தில் இருந்து 3 வருடங்களுக்கு சூனா ஜமாஅத்து சார்பில் வீடுகளுக்கு மவ்லீது ஓதினால் அவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாதாம். இலவசமாகவே ஓதப்படுமாம். ஏதோ வீட்டுக்காரர்களாப் பார்த்து விரும்பியதைக் கொடுக்கலாம் என்று கோவை சூனாபானாவினர் அறிவித்து விட்டார்களாம்.

                                                   அப்படி என்ன பளிச்சின்னு ஒரு மாற்றம் என்று கேட்டால், ஆமாம் நாங்கள் மவ்லீதை ஓதுவதே காசுக்காகத்தான் என இந்த வஹாபிகள் அவதூறு பரப்பி வைத்திருக்கிறார்கள். எனவே அந்த அவதூறை முறியடிக்கத்தான் இந்த ரேட் கட்டர் மவ்லீது முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கோவை சூனாபானா ஜமாஅத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
                                                   
                                                      இவர்கள் இனிவரும் 3 வருடங்களுக்கு வீடுவீடாகச் சென்று ஓத இருக்கும் இந்த மவ்லீதுக்கு ரேட் கட்டர் மவ்லீது என்ற பெயர் ஏன் வந்தது என்பதும் சுவாரஸ்யம் அதாவது இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் ரேட் கட்டர் முறையை அமுல்படுத்தியுள்ளன. நீங்கள் ஏதாவது ஒரு நெட் ஒர்க்கில் புதிதாக சிம்கார்டு வாங்கினால் உங்களுக்கு 3 மாதம் ரேட் கட்டர் இலவசமாகக் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் ஏர்செல் சிம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். புதிதாக சிம் ஆக்டிவேட் செய்யப்பட்ட முதல் 3 மாதங்களுக்கு ஏர் செல் டு ஏர் செல் 10 பைசாவும், ஏர்செல் டு மற்ற நிறுவனங்களுக்கு அழைத்தால் 30 பைசாவும் வசூல் செய்யப்படும். இந்தச் சலுகை 3 மாதங்களுக்கு மட்டும் தான். 3 மாதம் கழிந்து ஒரு நிமிடத்திற்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்படும். 3 மாதங்களாக 10 பைசாவிற்கு பேசி வந்தவர் திடீரென 2 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதும் அப்படியே நிலை குலைந்து போய் விடுவார்.
                           
                                                உடனடியாக கடைக்குச் சென்று எனக்கு ரேட் கட்டர் போடுங்கள் என்று சொல்லிவிட்டு எவ்வளவு என்று கேட்டால் கடைக்காரர் 200 முதல் 300 வரை வசூல் செய்து விடுவார். இதுதான் பழக்கப்படுத்துதல் என்பதாகும். அதாவது சும்மா இருப்பவரை ஒரு விசயத்திற்கு பழக்கி விட்டால் அது அவரை கடைசி வரை விடாது.
அதேபோல இத்தனை நாளும் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் தீவிர பிரச்சாரத்தில் அழிந்து மண்ணோடு மண்ணாகி “மம்மி”யாகிப் போன மவ்லீதை தோண்டி எடுத்து அதற்கு உயிரைக் கொடுக்க பல பக்கமிருந்தும் சுன்னத் அழிப்பு ஜமாத்தினர் வித விதமாக பூஜை கட்டி வருகின்றனர். அசத்தியவாதிகளின் ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் அவர்கள் அழிந்து போவது உறுதி.

                                           அதெல்லாம் சரிப்பா! மவ்லீது ஓதுவதற்கு காசு வேண்டாம் என்று சொல்லி விட்டு கொடுப்பதை வாங்கிக் கொள்வோம், பிரியாணியுடன் சுக்கு மல்லி காபியுடன் பீடாவும் கொடுத்தா போதும் என்று சொல்கிறீர்களே! ஒருவேளை நீங்கள் நபிகள் நாயகம் மீது நேசம் கொண்டவர்களாக இருந்தால் மவ்லீதுக்கென எவ்விதமான வசூலும் செய்யாதீர்கள், மவ்லீது ஓதும் வீடுகளில் பச்சைத்தண்ணீர் கூட குடிக்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்யுங்கள்.

                                            அதேபோல மவ்லீதை ஆதரித்து பல ஊர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்குச் செல்லும் சமாளி ஹசரத்தும், திண்டுக்கல் தலைப்பாகட்டு கபன் துணி ஹசரத்தும் இனி மல்வீது பிரச்சாரத்திற்கு யாரிடமும் ஒத்தை பைசா வாங்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்யுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

0 comments

Post a Comment