ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு இலவச விளம்பரம்


         தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு யாரும் போகாதீர்கள் என்று ஜமாஅத்துள் உலமா சபை மற்றும் பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.

பாபர் மஸ்ஜித்துக்காக போராட்டம் நடத்தியதில்லை, இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தியதில்லை, அப்சல் குரு, யாகூப் மேமனுக்காக குரல் கொடுத்ததில்லை, வரதட்சணைக்கு எதிராக, வட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததில்லை, இரத்ததான முகாம் நடத்தியதில்லை, இப்படி சமூகத்திற்காக வீதிக்கே வந்ததில்லை ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டிற்கு யாரும் போகக்கூடாது என்று அறிவிப்பு செய்கிறார்கள்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள், அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள் என்ற மாநாட்டிற்கு போகாதீர்கள் என்றால் இந்த அறிவிப்பு சுன்னத் ஜமாஅத் மக்கள் மத்தியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு தேவையான விளம்பரத்தை தான் பெற்று தரும்,

2004 ஏப்ரலில் TNTJ அவசர அவசரமாக பிறந்த குழந்தை, குழந்தையாக பிறந்து ஒன்றரை ஆண்டுகளில் கும்பகோணம் மாநாடு அறிவிக்கப்பட்டது.

இன்று காட்டக்கூடிய அனைத்து வித எதிர்ப்புகளையும் போல் அன்று 100 மடங்கு அதிகம் காட்டினார்கள். ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் குழந்தை கூட்டிய கூட்டத்திற்கு குடந்தையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு தமிழகத்தில் இப்படியொரு பிரம்மாண்ட கூட்டம் கூடியதில்லை என்றது வரலாறு.... மாநாட்டிற்கு வந்தவர்கள் மேடையை கூட காண முடியாமல், கும்பகோணத்தின் உள்ளே நுழைய முடியாதவாறு திரும்பிய வரலாறு படைத்தது அம்மாநாடு,

இலவச விளம்பரம் கொடுத்து அசிங்கப்பட்டவர்கள், இட ஒதுக்கீட்டிற்காக உங்களால் மக்களை கூட்டமுடியும், தவ்ஹீதை சொல்லி கூட்ட முடியுமா என்றார்கள்.

அப்படியா என்று 2008 மே மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் இரண்டு நாள் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதேப்போன்ற எதிர்ப்பு அப்போதும் காட்டப்பட்டது. 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்.

அதன்பிறகு மீண்டும் தேசிய இட ஒதுக்கீட்டிற்காக 2010 ஜூலை 4 ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான மாநாடு அறிவிக்கப்பட்டது. அப்போதும் இதேப்போன்ற கடும் எதிர்ப்புகள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அம்மாநாட்டிற்கு அருள் மழை பொழிந்து விட்டதால் 20 லட்சம் மக்கள் திடீரென தலைநகரில் நுழைந்தார்கள்.

தீவுத்திடல் நிரம்பி அதேப்போல் 5 தீவுத்திடலில் அமரக்கூடிய கூட்டம் சென்னை மாநகரை நிரப்பியது.

சென்னை மாநகரம் ஸ்தம்பித்தது.

சாலை போக்குவரத்து முதல் செல்போன் சிக்னல் வரை அனைத்து ஜாம் ஆகி நின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசம் கண்டிராத பிரம்மாண்ட கூட்டமென்று வர்ணிக்கப்பட்டது.  

வங்கக்கடலோரம் மையம் கொண்டது மனிதப்புயல் என்று பேசப்பட்டது. வாகனங்கள் நிறுத்துவதற்காக மெரீனா கடற்கரை ஒதுக்கப்பட்டது. மெரீனா முழுவதும் பச்சை, வெள்ளை, கருப்பு கொடி ஏந்திய வாகனங்களால் சூழப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கு வேறு இடம் மெரீனாவில் இல்லை என்ற வரலாற்றை பெற்ற ஒரே மாநாடு TNTJ நடத்திய தீவுத்திடல் மாநாடு.

மாநாடு முடிந்து தலைவர்கள் உடல் களைப்பை போக்குவதற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

TNTJ தலைவர்கள் டெல்லி புறப்பட்டார்கள்.

பிரதமரை சந்திப்பவர்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவர்களையே இரண்டு நிமிடம் (Sir Two Mins) என்று சொல்லி தான் உள்ளேயே அனுப்புவார்கள்.

அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தால் ஒரு கப் டீ கொடுத்து சிறப்பித்து அனுப்புவார்கள்.

அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் எந்த பகுதியிலிருந்து வந்தார்களோ அந்த பகுதி உணவு கொடுத்து கெளரவித்து அனுப்புவார்கள்.

TNTJ தலைவர்கள் பிரதமரை சந்தித்த போது இரண்டு நிமிடம் என்றும் சொல்லவில்லை, டீயும் கொடுக்கவில்லை, அதற்கு மாறாக தமிழக விருந்து கொடுத்து...

அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், சவூதி மன்னர், ஐ.நா பொதுச்செயலாளர் போன்ற வெளிநாட்டு தலைவர்களை அமர வைக்கும் நாற்காலியில் பீஜேவை அமர வைத்து கண்ணியப்படுத்தி பிரதமர் தன்னையே அறியாமல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்களாக எழுந்து வரும் வரை பிரதமர் தன்னையே மறந்தார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த பீஜே சொன்னார் இது எனக்கு கிடைத்த மரியாதை அல்ல, தீவுத்திடல் மாநாட்டில் கலந்து கொண்ட மக்களுக்கு கிடைத்த மரியாதை என்றார்.

யாரை நம் சமுதாயம் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்ததோ அவர்கள் தான் இயற்கை சீற்றம் முதல் இட ஒதுக்கீடு வரை நம் சமுதாயத்தை காவல் காத்து வருகிறார்கள்.

ஆகையால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இவர்கள் இன்னும் வேகமாக எதிர்த்து இன்னும் இலவச விளம்பரம் கொடுத்து தீவுத்திடல் மாநாட்டு ரெக்காடை முறியடித்து 25 லட்சம் மக்கள் கலந்து கொண்டு வரலாறு காணாத மாநாடாக அமையும் இன்ஷா அல்லாஹ்....

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொடுக்கப்பட்ட எதிர்ப்பு வேறு எந்த இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டாலும் அந்த இயக்கம் அட்ரசே இல்லாமல் போயிருக்கும் நினைத்து பார்த்தால் திகைத்து நிற்கும் எதிர்ப்புகள்..

இவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி அசராமல் அசுர வளர்ச்சியில் இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ஓர் இறைக்கொள்கை மட்டும் தான்... ஓர் இறைக்கொள்கையில் உறுதியாக இருப்பதினால் தான் தூண் இன்றி வான் அமைத்த தூயோனாகிய ஓர் இறைவன் தவ்ஹீத் ஜமாஅத்தை பாதுகாத்து வருகிறான்.

ஜனவரி 31 ஏகத்துவத்தின் எழுச்சி நாள், வரலாறு சொல்லும் இன்ஷா அல்லாஹ்....

0 comments

Post a Comment